"மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் படிப்பு சான்றிதழை சமர்பிக்க தேவையில்லை" - மருத்துவ கல்வி இயக்குனரகம்
7.5 % இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் படிப்பு சான்றிதழை சமர்பிக்க தேவையில்லை என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
2022-23 மற்றும் 2021-22 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
2021-22 கல்வியாண்டுக்கு முன்பு அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து படிப்பு சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் சான்றிதழ்கள் பள்ளிக்கல்வி துறையின் கல்வி மேலாண்மை தகவல் தரவு தளம் மூலம் சரிபார்க்கப்படும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது.
Comments